நடிகை கௌரி கிஷனிடம் உடல் ரீதியான கேள்வியை எழுப்பிய யூடியூபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் யூடியூபர் ஒருவர் நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்து கேள்வியெழுப்பினார். இக்கேள்விக்கு அப்போது கௌரி கிஷன் பதிலளிக்காமல் முகத்தைச் சுளித்தார்.
தொடர்ந்து, அதெர்ஸ் திரைப்படத்தின் சிறப்பு திரையிடலின்போது அந்த யூடியூபரை பார்த்த கௌரி கிஷன், “ஒரு நடிகையின் உடல் எடையைத் தெரிந்து வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? ஒருவரின் தோற்றத்தைக் குறித்த கேள்விகளை அனுமதிக்கக்கூடாது. நீங்கள் பத்திரிகையாளரே இல்லை. அத்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறீர்கள்” என வெளுத்து வாங்கினார்.
ஆனால், அக்கேள்வியைக் கேட்ட யூடியூபர் தன்னைத் தற்காக்கும் பொருட்டு, நான் தவறான கேள்வியைக் கேட்கவில்லை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும் என்பதுபோல் மழுப்பலாக பேசினார்.
இவரின் இப்பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தது. முக்கியமாக, இந்தியளவில் கௌரி கிஷனின் பேச்சு கவனிக்கப்பட்டு, பலரிடம் பாராட்டுகளையும் பெற்றார்.
இந்த நிலையில், அந்த யூடியூபர் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடந்த நிகழ்வால் கௌரி கிஷன் காயப்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: நடந்தது என்ன? கௌரி கிஷன் பேட்டி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.