பிரவீன் ராஜை வரவேற்ற குடும்ப உறுப்பினர்கள் படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரவீன்! எளிமையாக வரவேற்ற குடும்பம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரவீன் ராஜை அவரின் குடும்பத்தினர் வரவேற்ற விடியோ வைரல்...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரவீன் ராஜை அவரின் குடும்பத்தினர் மிகவும் எளிமையான முறையில் மிகுந்த அன்புடன் வரவேற்றனர்.

இதற்கு முன்பு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்களை மிகவும் ஆரவாரமாக குடும்பத்தினரும் ரசிகர்களும் வரவேற்றனர். ஆனால், பிரவீனின் வருகை எளிமையான முறையில் குடும்பத்தினர் சூழ நடந்துள்ளது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

எளிமையான பின்புலத்திலிருந்து விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றதன் மூலம் நடிப்புத் துறைக்குள் நுழைந்தவர் பிரவீன் ராஜ் தேவசகாயம். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த பிரவீன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிவந்த பிரவீன், எதிர்பாராத விதமாக 5 வது வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக வெளியேறினார்.

இவரின் வெளியேற்றம் (எலிமினேஷன்) பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களுக்கும் பேரதிர்ச்சியாகவே இருந்தது. விஜய் சேதுபதியும் பிரவீன் ஒரு வலிமையான போட்டியாளர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே பிரவீன் ராஜ் வெளியேறியது ரசிகர்கள் உள்பட பலருக்கும் எதிர்பாராத அதிர்ச்சியாகவே இருந்தது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரவீன் ராஜை அவரின் குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

மனைவி மற்றும் குழந்தையுடன் பிரவீன் ராஜ்

போட்டி முடிந்து வீட்டிற்கு வந்த பிரவீன் ராஜுக்கு ஆரத்தி எடுத்து பூக்களைத் தூவி அவரின் தாயாரும் மனைவியும் வரவேற்றனர். அவரின் மகன் மாலை அணிவித்து தந்தையை கட்டியணைத்து வரவேற்றார். இதனால் நெகிழ்ச்சி அடைந்த பிரவீன் கண்கலங்கி குடும்பத்தாரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இதற்கு முன்பு பிக் பாஸ் போட்டியாளர்கள் வீடு திரும்பினால், பிரமாண்டமாக வரவேற்ற விடியோவே வைரலான நிலையில், பிரவீன் குடும்பத்தார் அவரை வரவேற்ற விடியோ பலரைக் கவர்ந்துள்ளது.

இதையும் படிக்க | பிக் பாஸ்: பார்வதியைத் தள்ளிவிட்ட சபரி! கண்ணில் பலத்த காயம்!

Bigg boss 9 praveen raj devasagayam evicted

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: விபத்தா? சதிச்செயலா?

புத்துணர்வு... மாலத்தீவுக் கடல்... ராய் லட்சுமி!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் 2-வது காலாண்டு லாபம் உயர்வு!

ஜம்மு - காஷ்மீரில் 2,900 கிலோ வெடிப்பொருள் பறிமுதல்: தாக்குதல் திட்டம் முறியடிப்பு

அமெரிக்காவில் வாழ்வோருக்கு 2000 டாலர்கள்: டிரம்ப் | செய்திகள்: சில வரிகளில் | 10.11.25

SCROLL FOR NEXT