நடிகர் விஜய் சேதுபதி நடிகை ஆண்ட்ரியா குறித்து பேசியுள்ளார்.
நடிகர்கள் கவின் - ஆண்ட்ரியா நடிப்பில் உருவான மாஸ்க் திரைப்படம் வருகிற நவ. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கிய இப்படத்தை ஆண்ட்ரியாவே தயாரித்துள்ளார். வெற்றி மாறன் மேற்பார்வையில் உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவைப் பாராட்டிவிட்டு ஆண்ட்ரியாவைக் குறிப்பிட்டு, “சின்ன வயசுல கடற்கரையில சிலையைப் பார்த்த மாதிரி ஆண்ட்ரியா இன்னும் ரொம்ப வருசமா அப்படியே இருக்காங்க. யார்ரா இந்தப் பொண்னுன்னு அப்பவும் பார்த்தேன்; இப்பவும் பார்க்கிறேன்.
என் பையனும் யார்ரா இந்தப் பொண்னுன்னு பார்ப்பான்னு நினைக்கிறேன். அதே மாதிரி அப்படியே இருக்காங்க. பெட்ல தூங்கறாங்களா இல்லை ப்ரிட்ஜுல (fridge) தூங்கறாங்கலான்னு தெரியலை” என்றார்.
இதைக்கேட்ட ஆண்ட்ரியா சிரித்துக் கொண்டே இருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிக்க: விஜய் சேதுபதியின் டிரெயின் வெளியீட்டுத் தேதி இதுவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.