நடிகரும் நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டரை பிக் பாஸ் புகழ்ந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களிடம் முன்னாள் போட்டியாளரான சாண்டி மாஸ்டர் குறித்து பிக் பாஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
இதற்கு முன்பு எந்தவொரு சீசனிலும் நடக்காத வகையில், முன்னாள் போட்டியாளரைக் குறிப்பிட்டு பிக் பாஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
போட்டியைப் புரிந்துகொள்ளாமல், எதற்கெடுத்தாலும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதால் முன்னாள் போட்டியாளரை மேற்கோள் காட்டி பிக் பாஸ் கடிந்துகொண்டார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்துள்ளது. தற்போது கானா சாம்ராஜ்ஜியம் - தர்பீஸ் சாம்ராஜ்ஜியம் என மன்னர் ஆட்சி காலம் போன்ற நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு நாட்டு அமைச்சரவையாக பிரிக்கப்பட்டு, அவர்களிடையே போர் (போட்டிகள்) நடைபெற்று வருகிறது.
இதில், தர்பீஸ் சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக திவாகரும் அவருக்கு கீழ் அமைச்சரவையும், கானா சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக கானா வினோத்தும் அவருக்கு கீழ் ஒரு அமைச்சரவையும் பிரிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டிற்கும் இடையிலான போர் என போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பிக் பாஸ் திட்டமிட்டு வகுத்துக்கொடுத்த போட்டியையும் சுவாரஸியமாக விளையாடாமல், மேற்கொண்டு சண்டையிட்டுக்கொண்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பிக் பாஸ் போட்டியின்போது குறுக்கிட்டுப் பேசினார். இரவு, பகல் தூங்காமல் போட்டியின் கருவை சுவாரசியமாக யோசித்து விதிமுறைகளை வகுத்துக் கொடுத்தால், அதனை மேற்கொண்டு சுவாரசியமாக்காமல் சண்டையிடுவதா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்பு எனது சிஷியனாக இருந்த சாண்டி மாஸ்டர், ஒரு போட்டியை எவ்வாறு சுவாரசியமாக்கலாம் நகைச்சுவையாகக் கொண்டுசெல்லலாம் என்பதை நன்கு அறிந்தவர். அவரை அறிந்த உங்களால், போட்டியை அவ்வாறு சுவாரசியமாக்க முடியவில்லை என பிக் பாஸ் குறிப்பிட்டார்.
இதனால், கானா வினோத் உள்ளிட்டோர் வருத்தம் அடைந்து கண் கலங்கினர். இதுமட்டுமின்றி போட்டியாளர்களுடன் சேர்ந்து பிக் பாஸும் குரல் வழியாக போட்டியில் பங்கேற்றார். அப்போதாவது போட்டியில் சண்டையிடாமல் விளையாடுகிறீர்களா? எனப் பார்க்கிறேன் எனக் குறிப்பிட்டு பிக் பாஸும் போட்டியில் பங்கேற்றார்.
பிக் பாஸ் வரலாற்றில், இதற்கு முன்பு இவ்வாறு நடக்காததால், போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சீசனின் போட்டியாளர்கள், போட்டிக்கு விதிகளை வகுத்துக்கொடுத்த பிக் பாஸையே போட்டியில் பங்குபெற வைத்துவிட்டார்கள் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | போட்டியாளர்களுடன் சேர்ந்து டாஸ்க் விளையாடிய பிக் பாஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.