நடிகர் அஜித் குமாரின் கார் பந்தயக் குழுவுடன் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் (RCPL) இணைந்துள்ளது.
இதன்மூலம், இந்த நிறுவனத்தின் முதன்மை புத்துணர்ச்சி பானமான கேம்பா எனர்ஜி(Campa Energy), அஜித்குமார் கார் பந்தய அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படவுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அஜித் குமார் கார் ரேசிங் என்ற நிறுவனத்தையும் தொடங்கி கார் பந்தயக் குழுவை உருவாக்கியுள்ளார்.
இக்குழு ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இக்குழு திட்டமிட்டுள்ளது.
இதேபோன்று இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் அஜித் குமாருடன் இணைந்து செயல்படவுள்ளது.
இந்நிறுவனத்தின் முக்கிய எனர்ஜி டிரிங்க் பிராண்டான கேம்பா, அஜித் குமார் கார் ரேஸிங் அணிக்கு அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படவுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஊக்குவிப்பது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று என்றும், இதன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | பராசக்தி! ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடிய யுவன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.