செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தீபாவளி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

டியூட் 

டியூட் படத்தின் போஸ்டர்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது.

மலையாள நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றதுடன் சாய் அபயங்கரின் இசையும் கவனம் ஈர்த்திருந்தது.

டியூட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(நவ. 14) தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

கே-ராம்ப்

ஜெயின்ஸ் நானி இயக்கத்தில் கிரண் அப்பாவரம் - யுக்தி தரேஜா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் கே-ராம்ப்.

கே-ராம்ப் திரைப்படம் வரும் நவ. 15 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது

தெலுசு கதா 

நீரஜா கோனா இயக்கத்தில் சித்து ஜொன்னலட்டா, ஸ்ரீநிதி ஷெட்டி - ராஷி கன்னா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தெலுசு கதா.

தெலுசு கதா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (நவ. 14) தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

தில்லி கிரைம் - 3

தில்லி கிரைம் இணையத் தொடரின் முதல் இரண்டு பாகங்கள் எடுக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய பாகங்களில் நடித்த ஷெஃபாலி ஷா டிஐஜி வர்திகா சதுர்வேதியாக நடித்துள்ளார். ஹுமா குரேஷி புதிய வில்லியாக பாடி தீதி பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இணையத் தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

தசாவதார் 

சுபோத் கனோல்கர் இயக்கத்தில் திலீப் பிரபாவல்கர், பரத் ஜாதவ், மகேஷ் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மராத்தி மொழிப்படமான தசாவதார், நாளை(நவ. 14) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கடந்த வார ஓடிடி (கிஸ்)

கிஸ் திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.

இந்தத் திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்க, கவின் நாயகனாகவும் ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாகவும் நடித்திருந்தனர்.

பேட் கேர்ள்

இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த பேட் கேர்ள் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

நாயகியாக அஞ்சலி சிவராமனும் முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பாரமுல்லா

காணாமல் போன குழந்தைகளை தேடும் காவலரை மையப்படுத்தி திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட பாரமுல்லா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

சிரஞ்சீவா

நகைச்சுவை மற்றும் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட சிரஞ்சீவா படம் ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேட்டுவம் கிளைமேக்ஸுக்கு காத்திருக்கும் ஆர்யா!

தமிழகம், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிராக மனு - உச்ச நீதிமன்றம் பதில்!

மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி என்பது உண்மையல்ல: துரைமுருகன்

மெனோபாஸ் சிகிச்சை, மருந்துகளுக்கான எச்சரிக்கையை விலக்கும் அமெரிக்கா! காரணம் என்ன?

நிதாரி தொடர் கொலை வழக்கிலிருந்து விடுதலை! சிறையிலிருந்து வெளியே வந்த சுரேந்திர கோலி!!

SCROLL FOR NEXT