dinamani
செய்திகள்

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் பட டிரைலர்!

நடிகர் தனுஷின் புதிய பாலிவுட் திரைப்படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ டிரைலர் வெளியாகியுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் - இயக்குநர் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றொரு புதிய பாலிவுட் திரைப்படம் “தேரே இஷ்க் மெய்ன்”.

இந்தப் புதிய திரைப்படம், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா கதையுடன் தொடர்புடைய படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகை க்ருதி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் விமானப் படை வீரராக நடித்துள்ளார்.

வரும் நவ.28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (நவ. 14) வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, இயக்குநர் ஆனந்த் எல் ராய் - நடிகர் தனுஷ் கூட்டணியில் வெளியான ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய பாலிவுட் திரைப்படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிருத்விராஜின் விலாயத் புத்தா பட டிரைலர்!

The trailer of the film 'Tere Ishq Mein', starring actor Dhanush, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபரீதாபாதில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் வெடித்து 9 பேர் பலி,29 பேர் காயம்

பழங்குடியினா் கிராமத்தில் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்

மகிழ்ச்சியான நாள் இன்று: தினப்பலன்கள்!

மதுராபுரியில் இன்று மின் தடை

சிவன்மலை ஜேசீஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

SCROLL FOR NEXT