இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான 'தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ எனும் ஆவணப்படம் ஆஸ்கர் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.
காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவர், நீலம் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அமைப்புகளை நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில், பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மறைந்த முற்போக்கு பாடகரும், எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இசை ரீதியான ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் கிரிதரன் இயக்கியிருந்தார்.
இதையடுத்து, “தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த ஆவணப்படம், ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளதாக, நீலம் தயாரிப்பு நிறுவனம் இன்று (நவ. 15) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, 17 ஆவது கேரள சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்படம் விழாவில், 'தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரெபல்ஸ்’ சிறந்த முழு நீள ஆவணப்படம் எனும் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: துல்கர் சல்மானின் காந்தா பட முதல்நாள் வசூல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.