நடிகர் மம்மூட்டி களம்காவல் திரைப்படத்தில் மீண்டும் வில்லனாக நடித்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புழு, ரோர்சார்ச், பிரம்மயுகம் திரைப்படங்களைத் தொடர்ந்து வில்லனாக மம்மூட்டி நடித்திருக்கும் திரைப்படம் களம்காவல். இப்படம் கன்னியாகுமரி - கேரள எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதல் வழக்கை விசாரிக்கும் கதையாக உருவாகியிருப்பது டிரைலரில் தெரிகிறது.
காவல்துறை அதிகாரியாக விநாயகன் குற்றவாளியைக் கண்டுபிடிக்க விசாரணை செய்வதும் நடிகர் மம்மூட்டி அவர்களைச் சுற்றலில்விடுவதுமாக திரைக்கதை அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் மம்மூட்டி கதாநாயகனாக இரண்டு படங்கள் நடித்தால் தொடர்ந்து எதிர்மறையான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பார்.
அப்படி, களம்காவல் உருவாகியிருப்பதால் இப்படம் வெளியாகும் நவ. 27 ஆம் தேதிக்கு மம்மூக்கா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், இப்படத்தில் இசையமைப்பாளர் முஜீஃப் மஜீத் இசையில் உருவான நிலா காயும் நேரம் பாடலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: என் நட்சத்திரத்துக்கு கதை பிடிக்கும் வரையில்..! ரஜினி - 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகல் குறித்து கமல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.