நடிகர் தனுஷ், க்ருத்தி சனோன் 
செய்திகள்

அது மிகைப்படுத்தப்பட்ட உணர்வு... அதிர வைத்த தனுஷ்!

காதல் குறித்து தனுஷ்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷ் காதல் குறித்து பேசியது வைரலாகியுள்ளது.

நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் உருவான திரைப்படம் தேரே இஷ்க் மெய்ன். இப்படத்தை, இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். டிரைலர் காட்சிகளைப் பார்த்தால் காதலின் வலியையும் பிரிவையும் இப்படம் அழுத்தமாக பேசியுள்ளது தெரிகிறது.

இப்படம் நவ. 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், மும்பையில் இப்படத்தின் புரோமோஷனில் கலந்துகொண்ட நடிகர் தனுஷிடம், “உங்களுக்கு காதல் என்றால் என்ன?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு தனுஷ், “எனக்குத் தெரியாது” எனச் சொல்லி சிரித்துவிட்டு, “காதல் இன்னொரு மிகைப்படுத்தப்பட்ட உணர்வு. வேறு எதுவும் இல்லை” என்றார். இதைக் கேட்டதும் அருகே இருந்த க்ரித்தி சனோன் சிரிக்க, அரங்கத்தில் இருந்தவர்கள் விசிலடித்தனர்.

தொடர்ந்து பேசிய க்ரித்தி சனோன், “எனக்கு காலம் கடந்து நிற்கும் உண்மையான காதல் மேல் நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

actor dhanush said, 'Love is just a another overrated emotion, nothing for me'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணமங்கலத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

நீா்நிலை சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை!

மக்களவையில் எம்.பி.கள் தங்களுக்குள் உரையாடல்: தலைவா் ஓம் பிா்லா கண்டிப்பு

செல்லூா் தினசரி சந்தை வியாபாரிகள் சாலை மறியல்!

SCROLL FOR NEXT