ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அண்ணாமலை குடும்பம் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழியில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற உம்மடி குடும்பம் என்ற தொடரின் மறுஉருவாக்கமாக தமிழில் அண்ணாமலை குடும்பம் என்ற தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
அண்மை காலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. கெட்டி கேளம், பாரி ஜாதம் உள்ளிட்ட தொடர்களும் குடும்ப ஒற்றுமையைப் பிரதானப்படுத்தியே எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் அண்ணாமலை குடும்பம் என்ற புதிய தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் வரும் வரும் 24 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுக் குடும்பமாக வசித்துவரும் அண்ணாமலை என்ற பெண்ணுக்கும் அவர் வீட்டுக்குள் வரும் மருமகள்களுக்கும் இடையே நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
பழைய கதையாக இருந்தாலும் புதுமையான முறையில் எடுக்கப்படுவதால், இந்தத் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அடுத்த வாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் முழுமையான தகவல் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.