கலைமாமணி விருதுபெற்ற சாய் பல்லவி தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
சிறிய வயதில் இருந்தே இந்த விருதுக்காக ஏங்கியதாகக் கூறியுள்ளார்.
தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் அக்.11ஆம் தேதி நடைபெற்றது.
2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளில் நடிகை சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து அவர் கூறியதாவது:
நான் வளரும்போது இருந்தே கலைமாமணி விருது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த கௌரவத்தை நானும் பெற்றது மிகவும் நம்பமுடியாத அளவுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு மிக்க நன்றி.
இந்தப் பதிவின் தாமதுக்கான காரணத்தை அறிய மூன்றாவது படத்தைப் பார்க்கவும். அவர்களுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை அதனால்தான் எனக் கூறியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்றார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க்கும் இவர் பல்வேறு விருதுகளைப் பெற்று வருகிறார்.
தற்போது, ராமாயணா பாகம் 1, 2-இல் நடித்து வருகிறார். கடைசியாக வெளியான அமரன் படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.