முகப்பு
செய்திகள்

இணை இயக்குநருக்கு கார் பரிசளித்த பிரதீப் ரங்கநாதன்!

இணை இயக்குநர் ரமேஷ் நாராயணசாமிக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் கார் பரிசளித்துள்ளது குறித்து...

Updated On : 18 நவம்பர் 2025, 5:38 pm IST
இணை இயக்குநர் ரமேஷுடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் - Ramesh Narayanasamy/Instagram
பகிர்:

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது நண்பரும், இணை இயக்குநருமான ரமேஷ் நாராயணசாமிக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

நடிகர் ரவி மோகனின் ‘கோமாளி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதையடுத்து, ‘லவ் டுடே’ திரைப்படம் மூலம் நாயகனாகவும் அறிமுகமானார்.

இவரது நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரு.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அவருடைய திரைப்படங்களில் சிறு வேடங்களிலும், இணை இயக்குநராகவும் பணியாற்றிய ரமேஷ் நாராயணசாமிக்கு நேற்று (நவ. 17) நடிகர் பிரதீப் ரங்கநாதன் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதுகுறித்த, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரமேஷ் நாராயணசாமி பகிர்ந்துள்ள விடியோவில், உங்களுடைய விசுவாசத்திற்கு எனது சின்ன பரிசு என நடிகர் பிரதீப் கூறுவது பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: கிரைம் திரில்லர் கதையில் சந்தானம்!

summary

Actor Pradeep Ranganathan has gifted a car to his friend and co-director Ramesh Narayanasamy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.