ஜித்து ஜோசஃப், சூர்யா 
செய்திகள்

சூர்யா - 47 படப்பிடிப்பு அப்டேட்!

சூர்யா - 47 படப்பிடிப்பு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சூர்யாவின் 47வது படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா - 46 ஆக உருவாகும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

சூர்யா அடுத்ததாக ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளராம்.

இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுஷின் ஷியாம் இசையமைத்த கும்பளாங்கி நைட்ஸ், மஞ்ஞுமல் பாய்ஸ், ஆவேஷம் உள்ளிட்ட திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிச. 8 ஆம் தேதி கேரளத்தில் துவங்க உள்ளதாகவும் இதில் நடிகர்கள் நஸ்ரியா மற்றும் நஸ்லன் உள்ளிட்டோர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

suriya - 47th movie shooting will start dec.8 in kerala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT