சிறகடிக்க ஆசை நடிகர் ஸ்ரீதேவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடப்பட்ட பதிவால் ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி அனைத்து தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர். கூட்டுக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்தி நகைச்சுவை கலந்து விறுவிறுப்புடன் இந்தத் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விகடன் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் தொடரை எஸ். குமரன் இயக்கி வருகிறார். இத்தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, இயக்குநர் ஆர். சுந்தரராஜன், அனிலா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
மனோஜ் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிகர் ஸ்ரீதேவா நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடப்பட்ட பதிவால் ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அவரின் பதிவில், ”இரண்டு வருடங்கள், 450 எபிசோடுகள்—
நான் உன் முகத்தில இருந்த கண்ணாடி உன் முகத்தின் முதல் பாதுகாவலன் இன்று உன்னை விட்டு விடைபெறுகிறேன்.
கேமரா ஆன் ஆன தருணத்திலிருந்து நீ சொன்ன ஒவ்வொரு டயலாக்கும் நீ சொதப்பிய தருணங்களும் நீ சோதிக்கப்பட்டதும்
நீ சிந்திய கண்ணீரும் எல்லாத்தையும் என் லென்ஸ்லே ரெக்கார்ட் ஆயிருக்கு.
நீ விழுந்த நாளும் பார்த்தேன்… அதுக்கு மேல், உன் ஆர்வத்தை நான் பாராட்டுறேன். நீ மேல எழுந்த நாளும் பார்த்தேன். உன்ன நான் நம்புறேன்— உன் பயணத்தின் தொடக்கமே இது பிரிவு எல்லாருக்கும் பொதுவானது...
ஆனா என் கடைசி வார்த்தை— கண்ணாடி உடையலாம்…
ஆனா ஹீரோவின் பார்வை உடையக்கூடாது. கண்ணாடி மாறலாம்… ஆனா நீ நடிக்கும் போது உன் கண்களின் தீ மாறக்கூடாது. வாழ்த்துகள் நண்பா.
இப்போ நான் ஓய்வெடுக்கிற நேரம் வந்துருச்சு… ஒரு புதிய ஹீரோவுக்கு வழி கொடுக்குற பழையஹீரோ மாதிரி. போ மனோஜ்… புதிய கண்ணாடியோட வர்ற உன் அடுத்த ஃபிரேம் எல்லாரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யட்டும். இப்படிக்கு உன் மீது அக்கறை கொண்ட உன் பழைய கண்ணாடி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவைப் பார்த்து ரசிகர்கள் பலரும் சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து ஸ்ரீதேவா வெளியேறியுள்ளதாக எண்ணி, அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். ரசிகர்கள் பலர் வருத்தத்துடன் பதிவிட்டனர்.
ஆனால், அவர் தன்னுடைய கண்னாடியை மாற்றியதற்காகத்தான் இந்தப் பதிவு என்பதை அறியாமல் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
சிறகடிக்க ஆசை தொடரில் நடிகர் ஸ்ரீதேவாவின் நடிப்புக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியான பைசன், டீசல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.