நடிகர் சந்தீப் ப்ரதீப் நடிப்பில் உருவான எகோ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கிஷ்கிந்தா காண்டம் திரைப்படத்தை இயக்கிய தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் பாகுல் ரமேஷ் கதை, திரைக்கதையில் உருவான திரைப்படம் எகோ.
மலைத்தொடர்களால் சூழப்பட்ட ஒரு பகுதியில் காவல்துறையிடமிருந்து தப்பித்த குரியாச்சன் என்பவரைக் கண்டுபிடிக்கும் கதையில் சில சுவாரஸ்யமான திருப்பங்களும், திரில்லர் அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது.
கடந்த நவ. 21 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு கேரளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தமிழகத்திலும் கவனம் கிடைத்துள்ளது.
இதனால், கேரளம் மற்றும் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரைகளில் இப்படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: ஆபத்தான நாய்களுடன் சில மனிதர்கள்... எகோ - திரை விமர்சனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.