இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் நிவாஸ் கே பிரசன்னா. இவர் இசையமைப்பில் உருவான தெகிடி, சேதுபதி உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்புடனே இருக்கின்றன.
இறுதியாக, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த தென்னாட்டு தேசத்துல, தீக்கொளுத்தி பாடல்கள் பெரிய ஹிட் அடித்தன.
இந்த நிலையில், நிவாஸ் கே பிரசன்னா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
ஜடா திரைப்படத்தை இயக்கிய குமரன் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் நிவாஸுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ஏகே - 64 படப்பிடிப்பு எப்போது? ஆதிக் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.