நடிகை ஆண்ட்ரியா பிசாசு - 2 திரைப்படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா தயாரித்து, நடித்த மாஸ்க் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இதுவரை ரூ. 5 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும், டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று ஆண்ட்ரியா பாடவுள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா, “பிசாசு -2 கதையில் நான் நிர்வாணமாக நடிக்க வேண்டிய காட்சிகள் எழுதப்பட்டிருந்தன. ஆனால், படமாக்கியபோது மிஷ்கின் அதனை நீக்கிவிட்டார். சில கவர்ச்சியான காட்சிகள் இருந்தாலும் அவை நிர்வாணக்காட்சிகள் அல்ல. இந்த மாதிரியான காட்சியை வித்தியாசமான முறையில் எடுக்க வேண்டுமென மிஷ்கின் போன்ற இயக்குநர் கேட்டால், அவரின் நோக்கத்தை நான் நம்புவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.