விஜய் ஆண்டனி தயாரிக்கும் பூக்கி படத்தின் முதல் பாடல்!
“பூக்கி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது குறித்து...
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் “பூக்கி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் “பூக்கி”. இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கும் இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜய் திஷன் நாயகனாக அறிமுகமாகின்றார்.
இந்தப் படத்தில், நடிகர்கள் சுனில், பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், விஜய் ஆண்டனி இசையமைக்கின்றார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எழுதி இசையமைத்து பாடியுள்ள ”மனசுவலிக்கிது” எனும் முதல் பாடலை, பூக்கி படக்குழுவினர் இன்று (நவ. 26) வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி! இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!
The first song of the film “Pookie”, produced by music composer Vijay Antony, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.