தனுஷ் - 54 படப்பிடிப்பு நிறைவு!
தனுஷ் - 54 படப்பிடிப்பு குறித்து...
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் அவரது 54-வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் தனுஷ் இட்லி கடை திரைப்படத்தைத் தொடர்ந்து போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
பீரியட் கதையாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாகத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதையும் அறிவித்துள்ளார்.
இட்லி கடை அக். 1 ஆம் தேதி வெளியானது. தேரே இஷ்க் மெயின் நவம்பர் 28 அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ் - 54 திரைக்கு வருகிறது. இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: இட்லி கடை, காந்தாரா - 1 வசூல் நிலவரம்!