நடிகை காஜல் அகர்வால் தன் மீதான வதந்திகள் மற்றும் விஜய் குறித்து பேசியுள்ளார்.
2010 - 2016 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். நடிகர்கள் விஜய், அஜித் உள்பட நட்சத்திர நடிகர்களுடன் நடித்தவர் மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார்.
அதன்பின், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இறுதியாக, சிக்கந்தர் மற்றும் கண்ணப்பா படங்களில் நடித்திருந்தார். இரண்டும் தோல்விப் படங்களாகின.
இதற்கிடையே, காஜல் அகர்வால் விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் அடிக்கடி வதந்திகளும் பரவின.
இந்த நிலையில், விளம்பர நிகழ்வில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த காஜல் அகர்வாலிடம், “உங்களைக் குறித்து நிறைய வதந்திகள் வருகிறதே?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு காஜல், “நான் வதந்திகளுக்காகக் கவலைப்படுவதில்லை. நான் உங்கள் முன்பு தானே நின்றுகொண்டிருக்கிறேன்?” எனப் பதிலளித்தார்.
மேலும், நடிகர் விஜய்யின் கரூர் சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, காஜல், ”விஜய்யுடன் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் அவரின் ரசிகை. ஆனால், அரசியல் பேரணி குறித்து நான் என்ன பேசுவது? அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிக்க: ஏகே - 64 அனைவருக்குமான பொழுதுபோக்கு திரைப்படம்: ஆதிக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.