நடிகர் பவன் கல்யாணின் ஓஜி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் - இயக்குநர் சுஜித் கூட்டணியில் உருவான ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் அண்மையில் பிரம்மாண்டமாக வெளியானது.
அதிரடி ஆக்சன் காட்சிகள், காட்சிகளை உருவாக்கிய விதம் என சில விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மற்ற மொழிகளில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பவன் கல்யாண் நடித்த திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம் ஓஜிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெற்றி மாறனுடன் இணைந்த ஹரிஷ் கல்யாண்! எதற்கு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.