மகளே என் மருமகளே தொடரை, தங்கமகள் தொடரை இயக்கிய இயக்குநர் ஹரிஷ் ஆதித்யா இயக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகளே என் மருமகளே தொடரை இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி இயக்கி வந்தார்.
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி, காலமானார்.
இதையடுத்து, இந்தத் தொடருக்கு புதிய இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் மகளே என் மருமகளே தொடரை இயக்குநர் ஹரிஸ் ஆதித்யா இயக்கவுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் தங்கமகள், காற்றுக்கென்ன வேலி தொடரை இயக்கி பிரபலமானவர்.
யார் இந்த ஹரிஸ் ஆதித்யா?
இயக்குநர் ஹரிஸ் ஆதித்யா, நந்தா திரைப்படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கும்மாளம், மலைக்கோட்டை படங்களில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் பாலச்சந்தர் தயாரிப்பு நிறுவனத்தின் தேன் மொழியாள் என்ற தொடரில் நடித்து சின்ன திரையில் பயணத்தைத் தொடங்கிய இவருக்கு, அக்னி நட்சத்திரம் 2, கல்யாண பரிசு 2 தொடரை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமகள், தாலாட்டு மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தங்கமகள், காற்றுக்கென்ன வேலி தொடரை இயக்கினார். தற்போது மகளே என் மருமகளே தொடரை இயக்கவுள்ளார்.
மகளே என் மருமகளே தொடர் ஒளிபரப்பு
இத்தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.
மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார், மாமியார் மீது அதிக அன்பு கொண்ட மருமகள், இருவருக்கு இடையே நிகழும் பாசப் பிணைப்பை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.
மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் படிக்க: பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.