பெலாரஸ் நாட்டில் சூர்யா - 46 படப்பிடிப்பு!
சூர்யா - 46 படப்பிடிப்பு குறித்து....
நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 46-வது படத்தின் படப்பிடிப்பு பெலாரஸில் நடைபெற்று வருகிறது.
நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி வருகிறார். நாக வம்சி தயாரிக்கிறார்.
இந்தப் புதிய படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத் குமார், ரவீனா டண்டன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவின் பெலாரஸ் நாட்டில் நடைபெற்று வருகிறதாம்.
இங்கு முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு பின் மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?
actor suriya's 46th film shoot going on belaraus
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.