பிக் பாஸ் சீசன் 9 போட்டியில் திவாகருக்கு எதிராக ஒட்டுமொத்தப் போட்டியாளர்களும் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திவாகர் கூறும் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சக போட்டியாளர்கள் பேசினாலும், அனைத்து நேரங்களிலும் இதனைச் செய்வதால் திவாகருக்கு எதிராக ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடும் மாறியுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 2வது நாளான இன்று காலை முதலே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நடிகை கெமி மற்றும் பிரவீன் உடன் திவாகருக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. குறட்டை விடுவதால் காலையில் ஏற்பட்ட இந்த வாக்குவாதம், பிற்பகல் வரை தொடர்ந்தது.
இதேபோன்று ரம்யா ஜோவுடனான வாக்குவாதத்தில் நீ படித்திருக்கிறாயா? இல்லையா? என்ற திவாகரின் கேள்வி அவரை மிகவும் காயப்படுத்துகிறது. இதனால் பொங்கிய சக போட்டியாளர்கள் ரம்யாவுக்கு ஆதரவாக திவாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதத்தில் திவாகர் மன உளைச்சலுக்கு ஆளானார்.
தவறு செய்யும்போது அதனைக் கண்டிக்கும் வகையில் ஒட்டுமொத்த குரலாக பிக் பாஸ் வீட்டினர் ஒலித்தாலும், அந்த சம்பவத்துக்குப் பிறகும் திவாகரிடம் அதே போக்கையே கடைபிடித்துள்ளனர். இதனால் மனம் வருந்திய திவாகர், பிக் பாஸிடம் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
நான் தவறாகப் பேசும்போது பலரும் இணைந்து என்னை சொற்களால் தாக்குகின்றனர். ஆனால், சாதாரண நேரத்திலும் அதையே கடைபிடிப்பது வருத்தமளிப்பதாக பிக் பாஸிடம் திவாகர் கூறுகிறார்.
பலபேர் இருக்கும் வீட்டில் நான் மட்டும் தனித்துவிடப்பட்டதைப் போன்று இருப்பதாகவும் கூறுகிறார். இந்த விடியோ தற்போது வெளியான நிலையில், திவாகரின் வருத்தத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
திவாகரின் ஒருசில கருத்துகள் புண்படுத்தும் வகையில் இருந்தாலும், அதனைத் திருத்துவதற்கு பதிலாக ஒதுக்கி வைப்பது தவறானது என திவாகருக்கு ஆதரவாக கருத்துகள் எழத் தொடங்கியுள்ளன.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: இரண்டாம் நாளே கைகலப்பு! என்ன நடந்தது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.