நடிகர் விக்ரம் அறிமுகமான நாளில் துருவ் விக்ரமின் பைசன் வெளியாகிறது.
நடிகர் விக்ரம் என் காதல் கண்மணி திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். டி. ஜே. ஜாய் இயக்கிய இப்படம் அக். 17, 1990 ஆம் ஆண்டு வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக தோல்விப்படமானது.
ஆனால், விக்ரமின் நடிப்பு பேசப்பட்டதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தன.
இந்த நிலையில், விக்ரமின் முதல் திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் கழித்து அவரது மகன் துருவ் விக்ரமின் பைசன் அதே அக்டோபர் 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
பைசன் நிகழ்வுகளிலும் தன் முதல் திரைப்படம் இதுதான் என துருவ் விக்ரம் கூறி வருகிறார். காரணம், துருவ்வின் முதல் படமான ஆதித்ய வர்மா அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் என்பதாலும் மகான் விக்ரமின் படமென்பதாலும் பைசன்தான் கதாநாயகனாகத் தனக்கு முதல் திரைப்படம் என துருவ் தெரிவித்துள்ளார்.
இதுவரை தோல்விப்படங்களைக் கொடுக்காத மாரி செல்வராஜுடன் துருவ் பைசனில் இணைந்திருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: இசை நிறுவனத்தைத் துவங்கிய ஐசரி கணேஷ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.