சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறியதாக எழுந்த புகாரில் நேற்று(அக். 9) சீல் வைக்கப்பட்ட கன்னட பிக் பாஸ் ஸ்டுடியோ, இன்று(அக். 10) மீண்டும் திறக்கப்பட்டது.
மக்கள் மத்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி, கன்னட மொழியில் 12 -வது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை கன்னட நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார்.
பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலையில் பிடாடி அருகே அமைந்துள்ள ஜாலுவுட் ஸ்டுடியோவில் கன்னட பிக் பாஸ் வீடு் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிக் பாஸ் வீட்டில் சுற்றுச்சூழல் விதிகளை மீறப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வீட்டுக்கு நேற்று(அக். 9) சீல் வைத்தனர்.
இதனையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த விவாகரத்தில், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தலையிட்டு பெங்களூரு தெற்கு மாவட்ட துணை ஆணையரிடம் சீலை அகற்றுமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் மாவட்ட அதிகாரிகள் இன்று(அக். 9) அதிகாலை 3 மணியளவில் பிக் பாஸ் ஸ்டுடியோவுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, மீண்டும் திறந்தனர்.
தற்போது வழக்கமான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமாரருக்கு, நடிகர் கிச்சா சுதீப் தன்னுடைய எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வங்கிகளுக்கே இந்த நிலைமையா? வாடிக்கையாளர் ஆள் மாறாட்ட மோசடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.