கொம்புசீவி பட போஸ்டர்.  படம்: எக்ஸ் /
செய்திகள்

பொன்ராம் இயக்கும் சண்முக பாண்டியனின் கொம்புசீவி: டீசர் தேதி!

நடிகர் சண்முக பாண்டியனின் கொம்புசீவி பட டீசர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சண்முக பாண்டியனின் கொம்புசீவி பட டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் ’கொம்புவீசி’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

ஸ்டார் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் உசிலம்பட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை கலந்த இக்கதையில், ரௌடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகாவும் நடித்துள்ளனர்.

’ஒன்ஸ் அபான் எ டைம் இன் உசிலம்பட்டி’ என்கிற டேக் லைனும் படத்தின் போஸ்டர்களில் குறிப்பிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் நாளை (அக்.11) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

சண்முக பாண்டியனின் நடிப்பில் கடைசியாக வெளியான படைத் தலைவன் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

இயக்குநர் பொன்ராம் சிவகார்திகேயனுக்கு பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The teaser date for actor Shanmuga Pandian's film Kombuseevi has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தியமூா்த்தி பவன் உள்பட 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

செயற்கை நுண்ணறிவால் செம்மையாகும் நூல்கள்: செம்மொழி நிறுவன இயக்குநா் இரா.சந்திரசேகரன்

விடியல் பயணத் திட்டம்: செப்டம்பா் மாதம் சென்னையில் 3.97 கோடி மகளிா் பயணம்

உத்தம் நகரில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

குருகிராம்: சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT