இட்லி கடை திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை கடந்த அக். 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரிப்பின் முதல் வெளியீடு என்பதால் படத்திற்கான புரமோஷன்கள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என பல பகுதிகளில் நடைபெற்றது. இதுவே தனுஷ் நடித்த திரைப்படங்களிலேயே அதிகம் புரமோஷன் செய்யப்பட்ட படமாகும்.
இட்லி கடையும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், மறுபுறம் நல்ல கருத்துகளும் கிடைத்தன. இதனால், இட்லி கடை படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
ஆனால், விமர்சன ரீதியான வரவேற்பு கிடைத்தாலும் வணிக ரீதியாக இப்படம் வசூலில் ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பதாகவே தெரிகிறது. காரணம், ரூ. 70 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் இதுவரை ரூ. 45 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறதாம்.
காந்தாரா சாப்டர் - 1 படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இட்லி கடைக்கு கூட்டம் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், திரையரங்க வெளியீடு வழியாக இப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.