பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வதியின் செயலால் ஆத்திரமடைந்த கனி, மிக கோபத்துடன் பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி முதல் வாரத்தைக் கடந்து இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற வார இறுதி நாள் நிகழ்ச்சியில் இயக்குநர் பிரவீன் காந்தி எவிக்ஷன் செய்யப்பட்டார்.
முன்னதாக, விருப்பத்தின் அடிப்படையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை யோகா பயிற்சியாளர் நந்தினி வீட்டைவிட்டு வெளியேறினார்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், நேற்று வார இறுதி நாள் நிகழ்ச்சி முடிந்தவுடன் சாப்பாடு பிரச்னை தொடங்கியுள்ளது.
உணவை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில், ஒரு சின்ன பாத்திரத்தில் அனைவருக்கும் சரிசமமாக அளிப்பதாக சபரி கூறினார். அதனை ஏற்றுக் கொள்ளாமல் தனக்கு தேவையான அளவு உணவை பார்வதி பிளேட்டில் போட்டுக் கொண்டார்.
இது சபரி மற்றும் பார்வதி இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திவாகர் நடுவே தலையிட்டு சாப்பிடும்போது இப்படி செய்யாதீர்கள் என்று தேவையில்லாமல் பேச, நேற்று இரவே இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தனக்கு தேவையான அளவு உணவு வழங்காமல் பாரபட்சம் காட்டுவதாக சபரியிடம் திவாகர் சண்டை போடுகிறார். மேலும், சரிசமமாக சிறிய பாத்திரத்தில் உணவு பரிமாருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இதனிடையே, தற்போது இரண்டாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சமையலறையில் உள்ள மேஜை மீது அமர்ந்திருந்த பார்வதியை வீட்டின் இந்த வாரக் கேப்டன் துஷாரும் கனியும் இறங்குமாறு தெரிவிக்கின்றனர்.
ஆனால், மேஜையிலிருந்து இறங்க பார்வதி மறுப்பு தெரிவித்த நிலையில், சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருப்பவருக்கு எந்த கொம்பும் முளைக்கவில்லை என்று கனி தெரிவிக்கிறார்.
மேலும், ”அநியாயமாக சில விஷயங்களை நீங்கள் செய்துவிட்டு, என்னை கார்னர் செய்கிறார்கள் எனக் கூறுவதற்கு நாங்கள் வாயை மூடிக்கொண்டு போக முடியாது. அறிவுள்ளவர்களுக்கு சொல்வது புரியும், புத்தி இல்லாதவர்களுக்கு புரியாது. உங்களிடம் பேசுவது சுவற்றிடம் பேசுவது போன்றது” என பார்வதியிடம் கோபமாக கனி பேசுவது போன்று இரண்டாவது ப்ரோமோ அமைந்துள்ளது.
மூன்றாவது ப்ரோமோவில், பார்வதியும் திவாகரும் தனியாக அமர்ந்து கொண்டு, துஷார் மற்றும் கனியை விமர்சித்து பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.