திவாகர் கேட்டவுடன் முத்தம் கொடுத்த அரோரா படம்: எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ்: திவாகர் கேட்டவுடன் முத்தம் கொடுத்த அரோரா! புலம்பும் ரசிகர்கள்...

திவாகர் கேட்டவுடன் முத்தம் கொடுத்த அரோரா...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் திவாகருக்கு அரோரா முத்தம் கொடுத்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. விருப்பத்தின் பேரில் யோகா பயிற்சியாளர் நந்தினியும், முதல் வார எவிக்‌ஷனில் இயக்குநர் பிரவீன் காந்தியும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது 18 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் பிக் பாஸ் டீலக்ஸ் என்ற பெயரில் வசதிகள் மிக்க மற்றொரு வீடு பிரிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் 12 பேரும் பிக் பாஸ் டீலக்ஸ் வீட்டில் 6 பேரும் உள்ளனர். பிக் பாஸ் டீலக்ஸ் வீட்டில் இருப்பவர்கள் எழுந்து வெளியே வந்த பிறகே, பிக் பாஸ் வீட்டினர் சமையலைத் தொடங்க முடியும்.

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டினர் எழுந்து நீண்ட நேரமாகியும் பிக் பாஸ் டீலக்ஸ் வீட்டினர் வெளியே வராமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பிக் பாஸ் வீட்டினர் அவர்களை தூங்கவிடாமல் எழுப்பும் வகையில் சப்தமிட்டனர். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டினர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வெளியே வருவோம் என டீலக்ஸ் வீட்டினர் தெரிவித்துவிட்டனர்.

இரு வீட்டாரும் மாறிமாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, பிக் பாஸ் வீட்டுப் போட்டியாளர் ஆதிரை, கண்ணாடிக்கு மறுபுறமுள்ள டீலக்ஸ் வீட்டுப் போட்டியாளர் அரோராவுக்கு முத்தம் கொடுத்தார்.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த திவாகர் எனக்கும் ஒன்று கொடு எனக் கேட்க, அரோராவும் எந்த தயக்கமும் இன்றி திவாகருக்கு முத்தம் கொடுத்தார்.

இதையடுத்து, பிக் பாஸ் டீலக்ஸ் வீட்டில் இருக்கும் அரோரா பாவம், அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று திவாகர் ஆதரவு தெரிவிக்க தொடங்கிவிட்டார். உடனே, ஒரு முத்தம் கொடுத்தால் போதும், உங்கள் அணியைச் சேர்ந்தவர் எங்கள் பக்கம் வந்துவிடுவார் என்று அரோராவும் கமெண்ட் அடித்தார்.

பிக் பாஸ் தொடங்கியது முதல் அரோராவையும் திவாகரையும் விடியோக்களை நகைச்சுவையாக எடிட் செய்து ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே, மிகப் பெரிய ரசிகர்களைக் கொண்ட அரோரா, திவாகருக்கு முத்தம் கொடுத்தது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

’பிறவிப் பயனையே திவாகர் அடைந்துவிட்டார்’ என்று சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Bigg Boss Tamil 9: Aurora kissed Diwakar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருளும் அழகே அவள் பார்வையில்... அனு!

ஆஸி. உடனான தோல்வியிலிருந்து இந்தியா வெளியே வரவேண்டும்: மிதாலி ராஜ்

ஹரியாணாவில் மற்றொரு காவல் துறை அதிகாரி தற்கொலை

பத்திரிகையாளர் சந்திப்பில் டீசல் படக்குழுவினர் - புகைப்படங்கள்

உ.பி.யில் கடந்த 8 ஆண்டுகளில் 15,000 என்கவுன்ட்டர்கள்! 256 குற்றவாளிகள் பலி!

SCROLL FOR NEXT