ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் லோகா..! ரிலீஸ் தேதி?
லோகா படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு பற்றி...
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான ’லோகா சேப்டர் 1: சந்திரா’ படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான இந்தப் படம் கடந்த ஆக.28ஆம் தேதி வெளியானது.
கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் லோகா. சூப்பர் வுமன் கதையாக உருவான இதில் முன்னணி கதாபாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
ஆக்சன் காட்சிகளும் சூப்பர்வுமனாக மாறிய கதையும் சுவாரஸ்யமாக இருந்ததால் இப்படம் இந்தியளவில் கவனம் பெற்று வசூலில் சாதனை படைத்தது.
உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த முதல் கேரள திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.
இதன் ஓடிடி வெளியீடு குறித்து அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
It has been officially announced that the film 'Lokah Chapter 1: Chandra' starring actress Kalyani Priyadarshan will be released on Jio Hotstar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.