நடிகர் சல்மான் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸை தாக்கியுள்ளார்.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் இறுதியாக அவர் இயக்கங்களில் வெளியான தர்பார், சிக்கந்தர், மதராஸி ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் விமர்சன ரீதியாக தோல்விப் படங்களாகின.
மதராஸி வெளியீட்டுக்கு முன் முருகதாஸ் அளித்த நேர்காணலில் சிக்கந்தர் தோல்வி குறித்து பேசினார். முக்கியமாக, “சிக்கந்தர் தோல்விக்குக் காரணம் சல்மான் கான்தான். அவரின் உயிருக்கு அச்சுறுத்துதல் இருந்ததால் பகலிலும் பொதுவெளியிலும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. எல்லாக் காட்சிகளையும் கிரீன் மேட், சிஜியில் (கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்) எடுத்தால் எப்படி இருக்கும்?
ஒவ்வொரு இரவிலும் பகலுக்கான செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதிலும் சல்மான் கான் தாமதமாகத்தான் வருவார். இன்னும் சொன்னால், பிறர் வருந்துவதுபோல் ஆகிவிடும்” என்றார். முருகதாஸ் இப்படி பேசியதற்கு சல்மான் கான் ரசிகர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் கிடைத்தன.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சல்மான் கான், “ஏ. ஆர். முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றினார். அவர் காலை 6 மணிக்கே படப்பிடிப்புக்கு வந்துவிடுவார் எனக் கேள்விப்பட்டேன். மதராஸி, சிக்கந்தரை விட வெற்றி பெற்றுவிட்டதா?” என்றார். சல்மானின் இத்தாக்குதல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும், ஏ. ஆர். முருகதாஸுடன் நடிகர் சிவகார்த்திகேயனையும் சல்மான் கான் கிண்டல் செய்தது இங்குள்ள ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.