சுபிக்‌ஷா  படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

பிக் பாஸ் 9: சுபிக்‌ஷாவுக்கு தவெகவினரின் ஆதரவு அதிகரிப்பது ஏன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள சுபிக்‌ஷாவுக்கு தவெக ஆதரவு அதிகரித்து வருவது குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள சுபிக்‌ஷா தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சமூக வலைதளப் பக்கங்களில் தவெகவினரின் ஆதரவு சுபிக்‌ஷாவுக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து இவர் தவெக உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்கியது. இப்போட்டியில் 20 ஆண்டுகள், 9 பெண்கள் மற்றும் திருநங்கை ஒருவர் என 20 பேர் பங்கேற்றனர்.

இதில் நந்தினி உடல் நலக் குறைவு காரணமாக வெளியேறினார். முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேறினார்.

தற்போது பிக் பாஸ் இல்லத்தில் உள்ளவர்களில் சிலருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சுபிக்‌ஷாவுக்கு முன்பை விட தற்போது ஆதரவு அதிகரித்துள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவின் முதல் கடல்சார் யூடியூபராக சுபிக்‌ஷா உள்ளதாகக் கூறப்படுகிறது. தந்தையுடன் கடலுக்குச் செல்வது, பிடித்த மீன்களை படகில் சமைத்து உண்பது, மீன்கள் விற்பனை, கடற்கரை மக்களின் வாழ்க்கை என அனைத்தையும் பதிவு செய்து வருகிறார்.

எந்தவித பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால், இவருக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

இவர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை அடுத்துள்ள பெரியதாழை என்கிற மீனவ கிராமத்தை சேர்ந்தவர். கல்லூரி படிப்பை முடித்தது தற்போது முழுநேர யூடியூபராகவுள்ள சுபிக்‌ஷா, சொந்தமாக தொழில் ஒன்றையும் தொடங்கி அதிலும் வெற்றி பெற்றவராக உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுபிக்‌ஷா

சொந்தமாக ஊறுகாய் நிறுவனத்தைத் தொடங்கி மீன் ஊறுகாய் உற்பத்தி செய்து வருகிறார். 7 வகையான மீன்களில் ஊறுகாய் செய்து விற்று வருவதால் இவரின் சொந்தத் தொழிலும் மெருகேறி வருகிறது.

இந்நிலையில், தவெக உறுப்பினராகவும் சுபிக்‌ஷா உள்ளார். தவெக கொடி மற்றும் துண்டை அணிந்தவாறு உள்ள அவரின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இதன்மூலம் அவர் தவெக உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளதால், சுபிக்‌ஷாவுக்கு ஆதரவு அலை அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் இல்லத்தில் சுபிக்‌ஷா பங்குபெறும் போட்டிகள், அவரின் பேச்சு போன்றவற்றை விடியோக்களாக அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க | மக்களுக்குப் பிடித்த சின்ன திரை நடிகை! விருது வென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி!

Bigg boss tamil 9 TVK member subiksha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் நாளை மின் தடை

தைப்பூசம்: தஞ்சாவூா் வழியாக திருசெந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை!

10 லட்சம் மக்களுக்கு 22 நீதிபதிகள்: சட்ட அமைச்சா் தகவல்

ஆடு மேய்க்கும் தொழிலாளி தற்கொலை

வங்கியின் காப்பீட்டு பிரிவு மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT