ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா?
ரஜினியின் புதிய திரைப்படம் குறித்து...
நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த திரைப்பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் - 2 படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருள்செலவில் சென்னை, கேரளம் என படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை, அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்திற்குப் பின் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி - சுந்தர். சி கூட்டணியில் உருவான அருணாச்சலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. தற்போது, 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இக்கூட்டணி இணைகிற தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் லோகா..! ரிலீஸ் தேதி?
reports suggests sundar.c direct a new film with actor rajinikanth
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.