அரசன் புரோமோ காட்சி.  படம்: எக்ஸ் / சிம்பு
செய்திகள்

எனதருமை ரத்தங்களே... அரசன் புரோமா பார்த்த சிம்பு உற்சாகம்!

அரசன் படத்தின் திரையரங்க புரோமோ பற்றி சிம்பு கூறியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

அரசன் திரைப்படத்தின் திரையரங்க புரோமோ குறித்து நடிகர் சிம்பு உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார்.

இதன் புரோமோ நாளை (அக்.16) மாலை 6 மணிக்கு சில திரையரங்குகளில் வெளியாகிறது. யூடியூப்பில் அக்.17ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கேங்ஸ்டர் கதையாக அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் புரோமாவுக்கான டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்று வருவதால் சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

வடசென்னை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இந்த புரோமோவில் இடம்பெற உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த புரோமோ 5 நிமிடம் கால நேரம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இது பற்றி சிம்பு எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

எனதருமை ரத்தங்களே! வெற்றி மாறன் சாரின் திரையரங்குக்கான அரசன் பட புரோமோவை இசையுடன் கண்டு களித்தேன்.

நான் சொல்றேன். டைம் (நேரம்) கெடைச்சா தியேட்டரில் பாருங்கள். திரையரங்க அனுபவத்தை தவறவிடாதீர்கள். அவ்வளவு மதிப்புடையது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேரே இஷ்க் மே 3 நாள் வசூல் இவ்வளவா?

பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்ற சமந்தா திருமணம்!

இலங்கையில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 334 ஆனது!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

சமந்தா - ராஜ் நிதிமோர் திருமணம்!

SCROLL FOR NEXT