அரசன் திரைப்படத்தின் புதிய அறிவிப்பு போஸ்டரை தயாரிப்பாளர் தாணு பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கேங்ஸ்டர் கதையாக அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் புரோமோ தமிழகத்தின் சில திரைகளில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதற்காக, சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் தாணு, ”அரங்கம் அதிர.. ஆர்ப்பாட்டம் தொடர.. இனிதே கொண்டாடுவோம்..” எனக் குறிப்பிட்டு இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், சிம்பு இளவயது தோற்றத்தில் முகம் முழுக்க ரத்தத்துடன் இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதையும் உறுதி செய்துள்ளனர்.
இது ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதையும் படிக்க: வடசென்னை வெளியான நாளில் அரசன் புரோமோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.