செய்திகள்

டியூட், பைசன், டீசல் எப்படி இருக்கின்றன?

தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த படங்களின் நிலவரம்...

இணையதளச் செய்திப் பிரிவு

டியூட், பைசன், டீசல் திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.

தீபாவளி வெளியீடாக இம்முறை இளம் கதாநாயகர்கள் நடித்த திரைப்படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. இதற்கு, மூத்த நடிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இம்மூன்று திரைப்படங்களின் முதல் காட்சிகள் தமிழகத்தில் நிறைவடைந்த நிலையில், இப்படங்களின் நிலவரம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.

இதன் அடிப்படையில், இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கபடியை மையமாகக் கொண்டு உருவான இப்படம் காலநேரம் அதிகமாக இருந்தத்தைத் தவிர வேறு மோசமான விமர்சனங்களைப் பெறவில்லை.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இன்றைய கால இளைஞர்களுக்கான கதையாக உருவாகியிருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன.

பார்க்கிங், லப்பர் பந்து திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணின் டீசல் படமும் எதிர்பார்ப்புடனே வெளியானது. ஆனால், இப்படத்திற்கு மோசமான விமர்சனங்களே கிடைத்துள்ளன. கச்சா எண்ணைத் திருட்டைப் பேசினாலும் திரைக்கதை சரியில்லாததால் சோர்வைக் கொடுப்பதாகக் கூறி வருகின்றனர்.

dude, bison, diesel movie reviews from social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு இந்தியா: இஸ்ரோ தலைவர் பெருமிதம்

அமெரிக்காவில் பனிப்புயலால் கடும் பாதிப்பு: ஒரேநாளில் 10,000 விமானங்கள் ரத்து!

கலைத்துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜா ஸ்தபதி!

கராத்தே பாபு டீசர்!

ஆர்ஜேடியின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு!

SCROLL FOR NEXT