கேரளத்தில் விளம்பர நிகழ்ச்சியின் கொண்டாடத்தின்போது ஃபயர் கன்னை பயன்படுத்திய நடிகை மமிதா பைஜு அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் இருந்து தப்பினார்.
பிரேமலு திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை மமிதா பைஜு. இவர் தற்போது பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இன்று வெளியாகியிருக்கும் டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மமிதா பைஜு.
அடுத்து பொங்கலுக்கு திரைக்கும் வரும் ஜனநாயகன் படத்திலும் மமிதா நடித்துள்ளார். இதுதவிர நடிகர் சூர்யா வைத்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் படம், இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்னு விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரண்டு வானம் படம் என பிஸியாக உள்ளார்.
இந்த நிலையில் கேரளத்தில் விளம்பர நிகழ்ச்சியின் போது ரசிகர்களை மகிழ்விக்க நடிகை மமிதா பைஜு ஃபயர் கன்னை பயன்படுத்தி கொண்டாடத்தில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் ஃபயர் கன்னை ஒருவித பயத்துடன் மற்றொருவர் கையில் இருந்து வாங்கிய அவர் மேலே தூக்கிப் பிடித்து மகிழ்ந்தார்.
அப்போது அதன் தணல் தன் தலையில் தெறித்ததால் ஃபயர் கன்னை உடனே மேடையிலிருந்து கீழே கொண்டு சென்றார். இதில் மமிதா பைஜு அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி தீ விபத்தில் இருந்து தப்பினார். தற்போது இந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.