பாசில் ஜோசப், டோவினோ தாமஸ், வினித் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடிப்பில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் தலைப்பு டீசர் வெளியாகி மக்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் அனந்து, பாசில் ஜோசப் தயாரிப்பில் பால்சன் சகாரியா, அருண் அனிருதன் எழுத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை அருண் அனிருதன் இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் பிரபல நடிகர்களாக இருக்கும் பாசில் ஜோசப், டோவினா தாமஸ், வினித் ஸ்ரீனிவாசன் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பாசில் ஜோசப் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த லோகா படத்தில் டோவினோ தாமஸ் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.