தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களின் வசூல் குறித்த தகவல்களில் டியூட் படம் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாட்டில் நேற்று (அக்.17) பைசன் காளமாடன், டியூட், டீசல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் நடிப்பில் டியூட் படம் உருவாகியுள்ளது. இது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியானது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி நடிப்பில் பைசன் காளமாடன் உருவாகியுள்ளது.
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் டீசல் படம் உருவாகியுள்ளது.
இந்த மூன்று படங்களில் டியூட் படம் முன்னிலை வகிப்பதாக வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்நாள் வசூல் பற்றிய தகவல்கள்
டியூட் - ரூ.11கோடி (தமிழில் ரூ.7 கோடி)
பைசன் - ரூ. 2.30 கோடி
டீசல் - ரூ.40 லட்சம்
பிரதீப் ரங்கநாதன் தொடர்ச்சியாக நல்ல பொழுதுபோக்கு படங்களை அளித்து வருகிறார்.
லவ் டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றி பெற்றதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த தீபாவளிக்கு மிகப்பெரிய நாயகர்களின் யாருடைய படங்களும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.