கென் கருணாஸ், ஜி.வி.பிரகாஷ்.  படங்கள்: எக்ஸ் / பார்வதா என்டர்டெயின்மென்ட்ஸ்.
செய்திகள்

கென் கருணாஸ் படத்தில் ஜி.வி.பிரகாஷ்!

கென் கருணாஸ் இயக்கும் முதல் படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அவரே நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ளார்.

அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் கென் கருணாஸ்.

இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து விடுதலை - 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி அனுபவம் பெற்றார்.

தானே இயக்கி நடிக்கும் முதல் படத்தினை பார்வதா என்டர்டெயின்மென்ட் கருப்பையா தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு ‘காதலன்’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ளதை, புரோமோ விடியோவாக வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Actor Karunas' son Ken Karunas is making his directorial debut. He is playing the lead role in this film, which also features music composer G.V. Prakash.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

SCROLL FOR NEXT