சகோதரி நிஷா அகர்வால் உடன் காஜல் அகர்வால்.  படங்கள்: இன்ஸ்டா / காஜல் அகர்வால்.
செய்திகள்

பிடித்தமான தொல்லையே... சகோதரி பிறந்த நாளுக்கு காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!

நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை பற்றி பதிவிட்டதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷா அகர்வால் பிறந்த நாளில் வாழ்த்துகளைத் தெரிவித்து நீண்ட பதிவினையும் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவரது மாற்றங்கள், அன்பான தொல்லைகள் குறித்தும் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் (40 வயது) தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் கண்ணப்பா படம் வெளியானது.

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் (36 வயது) தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் வியாபாரத்தை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது பிறந்தநாளுக்காக நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டதாவது:

எனது டார்லிங் சகோதரிக்கு, பிறந்த நாள் வாழ்த்துகள்! (இருப்பினும் நாங்கள் அந்த வார்த்தையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டோம்).

நீ உள்ளும் புறமும் அழகான, பலமான, தன்னம்பிக்கையூட்டும் பெண்ணாக வளர்ந்துவிட்டாய். உனது சிரிப்பு, வளர்ச்சி, தைரியம் நிரம்பிய உனது வாழ்க்கையைப் பார்க்கும் எனது இதயம் பெருமையினால் நிரம்புகிறது.

இங்கு பதிவிட்டுள்ள அளப்பறிய தருணங்கள் நமக்கு இருக்கின்றன. இன்னும் அற்புதமான தருணங்கள் வரும். வயதான ஒயின் மாதிரி நீ சிறிது விலையுயர்ந்துவிட்டாய், சில நேரங்களில் கணிக்க முடியாதவளாக, ஆனால் எப்போதும் மதிப்பு வாய்ந்தவளாக இருக்கிறாய். ஒவ்வொரு பத்தாண்டுகளையும் நீ ராணியையைப் போல அணிகிறாய்.

என் எப்போதுமான பிடித்தமான தொல்லையே, பிறந்த நாள் வாழ்த்துகள் உனக்கு! எல்லையில்லா அன்பு உன்மீது, அழகாக வளர்ந்துள்ளாய்! எனக் கூறியுள்ளார்.

Actress Kajal Aggarwal has posted a long post wishing her younger sister Nisha Aggarwal on her birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

நெல்லையில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

நைஜீரியா மோதலில் 17 போ் உயிரிழப்பு

சட்டப்பேரவையில் தனது தரப்புக்கு அங்கீகாரம்: அன்புமணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT