மெளனம் பேசியதே தொடர் போஸ்டர் 
செய்திகள்

குறுகிய காலத்தில் நிறைவடையும் மெளனம் பேசியதே தொடர்!

மெளனம் பேசியதே தொடர் நிறைவடைவது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெளனம் பேசியதே தொடர் விரைவில் நிறைவடைகிறது.

இந்தத் தொடர் கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

மெளனம் பேசியதே தொடர், ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஜகதாத்ரி தொடரின் மறு உருவாக்கமாகும்.

இந்தத் தொடரில் அசோக் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஃபெளசி நடித்து வருகிறார். இவர்களுடன் ஐரா அகர்வாலும் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

ரசிகர்கள் மத்தியிலும் டிஆர்பியிலும் முன்னிலையில் இருந்து வரும் மெளனம் பேசியதே தொடர், காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொடர் விரைவில் நிறையவடையவுள்ள நிலையில், மெளனம் பேசியதே தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு, விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

மெளனம் பேசியதே தொடர் ஆரம்பித்து ஒரு ஆண்டே முழுமையடைந்துள்ள நிலையில், விரைவில் நிறைவடையவுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

The series Maunam Pesiyathe, which is being aired on Zee Tamil TV, is coming to an end soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம்: சபரிமலை தலைமை தந்திரி பங்கேற்பு

மீன் அமிலம் தயாரிப்பு: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

திமுக தோ்தல் அறிக்கை குழு நெல்லைக்கு ஜன.30 இல் வருகை

பேரவைத் தோ்தல் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த்

உடல் ரீதியான தீங்குகளுக்கு அப்பால் சிறுமிகளின் உளவியலில் கவனம் தேவை: ராஷ்மி சிங்

SCROLL FOR NEXT