நடிகை ராதிகா ஆப்தே சினிமாவில் நடிகைகளைப் பயன்படுத்துவது குறித்து தன் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
பான் இந்தியளவில் கவனிக்கப்படும் நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இறுதியாக, இவர் நடிப்பில் உருவான சிஸ்டர் மிட்நைட் திரைப்படம் கவனிக்கப்பட்டது. அதில், தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நல்ல நடிப்பை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ராதிகா ஆப்தே, “இந்திய சினிமாவில் நடிகர்களை மையமிட்டே கதைகள் உருவாகின்றன. இவர்கள் மட்டும்தான் முக்கியம் என்பது போல் காட்சிகளும் திட்டமிடப்படுகின்றன.
ஆனால், நடிகைகளைக் காதல் செய்வதற்கும் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். நடிகைகளின் திறமையை இருட்டடிப்பு செய்யும் போக்கை இயக்குநர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: துருவ்வின் அடுத்த படம் இதுவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.