காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் தமிழக வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1 கடந்த ஆக.2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது.
பான் இந்திய வெளியீடான இது இதுவரை ரூ. 770 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் பெரிய வணிக வெற்றியைப் பெற்ற படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.
இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் ரூ. 70 கோடியையும் கேரளத்தில் ரூ. 55 கோடியையும் வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளியிலும் நிறைய திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் காந்தா சாப்டர் - 1 ரூ.850 கோடி வரை வசூலிக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: ப்ரண்ட்ஸ் மறுவெளியீட்டுத் தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.