செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் அசத்தலான படங்கள்!

இந்த வாரம் ஓடிடி வெளியாகும் படங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

சக்தித் திருமகன் 

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் திரைப்படம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற அக். 24 ஆம் தேதி வெளியாகிறது.

சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியிருந்தார்.

ஓஜி 

ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் - இயக்குநர் சுஜித் கூட்டணியில் உருவான திரைப்படம் ’தே கால் ஹிம் ஓஜி’.

இந்தத் திரைப்படம் நாளை(அக். 23) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணலாம்.

பரம் சுந்தரி

சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான மலையாள மொழிப் படமான 'பரம் சுந்தரி' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக். 24 ஆம் தேதி வெளியாகிறது.

மிராஜ் 

ஜீத்து ஜோசப் இயக்கிய ஆசிப் அலியின் மிராஜ் திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

இந்தப் படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஏற்கெனவே, பல ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ள ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளிக்கு இது ஆறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தணல்

அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான 'தணல்' திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

கடந்த வார ஓடிடி

கிஷ்கிந்தாபுரி படத்தை ஜி5 ஓடிடி தளத்திலும் டியர் ஜீவா படத்தை டென்ட்கொட்டா ஓடிடி தளத்திலும் சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலும் காணலாம்.

You can see which movies are releasing this week on OTT platforms.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷின் 55 ஆவது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக அரசு எந்த எல்லைக்கும் செல்கிறது! - அண்ணாமலை விமர்சனம்

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

SCROLL FOR NEXT