படம்: விஜய் டிவி
செய்திகள்

பிக் பாஸில் வெடித்த வன்முறை! மேஜையைத் தூக்கி வீசிய கலை! பார்வதி, திவாகர் மோதல்!

பிக் பாஸ் தமிழில் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பார்வதியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேஜையை கலையரசன் தூக்கி விசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை பிக் பாஸ் போட்டியில் இருந்து நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். தற்போது 17 போட்டியாளர்கள் வீட்டுக்குள் உள்ளனர்.

இந்த வாரம் ’பிக் பாஸ் ஜூஸ் ஃபேக்டரி’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் டீலக்ஸ் வீட்டில் இருந்து 6 பேர் ஜூஸ் கடை உரிமையாளர்கள், பிக் பாஸ் வீட்டில் இருந்து 9 பேர் ஜூஸ் பாட்டில் விற்பனையாளர்கள். பார்வதி மற்றும் திவாகர் ஆகியோர் தர சரிபார்ப்பாளர்களாக உள்ளனர்.

ஜூஸ் கடை உரிமையாளர்கள், ஜூஸ் பாட்டில் விற்பனையாளர்களிடம் இருந்து ஜூஸ் பாட்டில்களை வாங்கி, அதில், அவர்கள் தயாரித்த ஜூஸ்களை நிரப்பி தர சரிபார்ப்பாளர்களிடம் வழங்க வேண்டும்.

சுத்தம், சுவை உள்ளிட்டவையை சரிபார்த்து அதனை ஏற்பதும், நிராகரிப்பதும் தர சரிபார்ப்பாளர்களின் முடிவு.

இந்த நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஜூஸ் நிரப்பிய பாட்டிலை பார்வதியிடம் ஆதிரை அளிக்கிறார். அதில், குறை கண்டுபிடித்து பார்வதி நிராகரிக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பார்வதி ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டும் கலையரசன், ஜூஸ் பாட்டில் வைக்கும் மேஜையை தள்ளிவிடுகிறார். தவறாக நடக்கும்போது வன்முறை வெடிக்கும் என்று வீட்டின் இந்த வார கேப்டன் கனியும், கலையரசனும் முழக்கமிடுகின்றனர்.

இரண்டாவது ப்ரோமோவில், தர சரிபார்ப்பாளர்களாக இருக்கும் பார்வதிக்கும், திவாகருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, கூடுதல் சாப்பாடு தருவதால் அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாக திவாகர் மீது பார்வதி குற்றச்சாட்டை வைக்கிறார். இதில் ஆத்திரமடைந்த திவாகர், அவர் கையில் வைத்திருந்த பொருள்களை தூக்கி வீசினார்.

பிக் பாஸ் சீசன் 9 தொடங்கியதில் இருந்து பார்வதி, திவாகர் மற்றும் கலையரசன் ஆகியோர் நண்பர்களாக பழகிவந்த நிலையில், இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டிருப்பது பார்வையாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Violence breaks out on Bigg Boss: Kalaiyarsan throwing tables

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண மோசடியில் ஈடுபட்ட இருவா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

இளைஞரைத் தாக்கி இருசக்கர வாகனம் பறிப்பு

அரசுக் கல்லூரியில் ஆவணங்கள் எரிப்பு: போலீஸாா் விசாரணை

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் அக்.28-இல் பொது ஏலம்

கழிவுநீா் வாய்க்கால் கட்டுமான பணியை விரைபடுத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT