நடிகை மனோரமாவின் மகன் பூபதி உடல் நலக்குறைவால் காலமானார்.
நடிகை மனோரமாவின் ஒரே மகனான பூபதி குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, சில படங்களில் நடித்தவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை. இதற்கிடையே, மதுப்பழக்கமும் இருந்ததால் சினிமாவில் நடிக்க முடியாத சூழலும் உருவானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் பூபதி (70) உடல் நலக்குறையால் இன்று காலை சென்னையில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலகண்ட மேத்தா தெரு, தி. நகர் இல்லத்தில் வைக்கப்படும் என்றும் இறுதிச் சடங்கு நாளை (அக். 24) மதியம் 3 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும் என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: சபேஷ் - முரளி இணை இசையமைப்பாளர் சபேசன் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.