டாம் க்ரூஸ், அனா டி அர்மாஸ் 
செய்திகள்

நோ மேரேஜ்! டாம் க்ரூஸைப் பிரிந்த அனா டி அர்மாஸ்?

டாம் க்ரூஸும், நடிகை அனா டி அர்மாஸும் பிரிந்ததாகக் கூறப்படுகிறது...

இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட் பிரபலங்கள் டாம் க்ரூஸ் மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோர் பிரிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழும் டாம் க்ரூஸ் (63) மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் (37) இருவரும் நீண்டகாலமாகவே காதலித்து வந்தனர்.

இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும், அதுவும் விண்வெளியிலோ அல்லது விமானத்திலிருந்து ஸ்கைடைவிங் செய்துகொண்டு திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

டாம் க்ரூஸ், ஏற்கெனவே 3 முறை விவாகரத்து பெற்றவர் என்பதும், அனா டி அர்மாஸ் ஒருமுறை விவாகரத்து பெற்றவர் என்பதால் இத்திருமணத்திலாவது இருவரும் நீண்ட காலம் இணைந்து வாழட்டும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், சினிமா டுவிஸ்ட் போல இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டாம் க்ரூஸ் மற்றும் அனா டி அர்மாஸுக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து மோதல்களால் இருவரும் பிரிய முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், கல்யாணம் விண்வெளியிலோ விமானத்திலோ அல்ல கனவில்தானாம் என ரசிகர்கள் கிண்டலடித்தும் வருகின்றனர்.

actors tom cruise and ana de armas are plan to breakup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரமற்ற மருந்துகள் பட்டியலில் இடம்பெறாத ‘கோல்ட்ரிஃப்’: ஆய்வு விவரங்களை சமா்ப்பிக்காத தமிழகம்

ரிசா்வ் வங்கி: 880 டன்னைக் கடந்த தங்கம் கையிருப்பு

முதல்வா் அக்.28-இல் தென்காசி பயணம்

தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீா் அகற்றம்

இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கு: 3 போ் தலைமறைவு

SCROLL FOR NEXT